வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு


வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு
x
திருப்பூர்

வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வார சந்தை செயல்படும். இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறி பயிர் வகைகள் கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு விளை பொருட்களை கொண்டு வரவில்லை, காய்கறிகளை விவசாயிகளிடம் வாங்கி விற்கும் வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை, இதனால் வார சந்தையில் வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது.


Next Story