மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x

காயல்பட்டினத்தில் கற்புடையார் பள்ளிவாசலில் பழமைவாய்ந்த பப்பரப்புளி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் கற்புடையார் பள்ளிவாசலில் பழமைவாய்ந்த மரமான பப்பரப்புளி என்ற மரக்கன்றுகள் நடும் விழா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசகர் டி.எம்.ஆர்.மர்ஜுக் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் எம்.கே.முகைதீன் தம்பி, கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஏ.கே.சையது அப்துல் காதர், கற்புடையார் பள்ளிவாசல் தலைவர் எம்.எம்.அஜீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.இ.அமானுல்லா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். திருச்செந்தூர் துணை கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், காயல்பட்டினம் நகரசபை ஆணையாளர் சுகந்தி, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், வரலாற்று ஆசிரியர் காட்சன், காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் கண்ணன், தொழிலதிபர் லேண்ட்மார்க் அபுல் ஹஸன், காயல்பட்டினம் இயற்கை வளம் நிறுவன சேர்மன் அப்துல் காதர், செயலாளர் ஏ.பி.டி.ஜாஹிர், இணை செயலாளர் காளி அலாவுதீன், பொருளாளர் முத்துகிருஷ்ணன், ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story