மரக்கன்று நடும் விழா
காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை பசுமையாக்கும் வகையில் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் வேம்பு, புங்கன், மகாகனி, பாதாம் உள்ளிட்ட 110 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பிரிட்டோ தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருணாச்சலம் செட்டியார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் சமூக ஆர்வலர் சேவியர், வேளாண் ஆசிரியர் ராஜ்குமார், முருகப்பா அறக்கட்டளை உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story