டாக்டர் ஆர்.கே.எஸ்.மாஸ்டர்ஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


டாக்டர் ஆர்.கே.எஸ்.மாஸ்டர்ஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.மாஸ்டர்ஸ் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் கலாம் மன்றத்தின் சார்பில் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜு, பள்ளி துணைத்தலைவர் டாக்டர் நளினி, இயக்குனர் டாக்டர் சிஞ்சுபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மாலதி வரவேற்றார். நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவைகள் நடப்பட்டன. கலைக்கல்லூரி முதல்வர் மோகன சுந்தர், ஆசிரியர்கள் அனுசுயா, யுவனேஷ், வினிதா, சரண்யா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கு துளசி குடிநீரும், விதைப்பந்தும் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் உலகநாதன் நன்றி கூறினார்.


Next Story