கும்பகோணம் அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


கும்பகோணம் அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

கும்பகோணம் அரசு கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர்

கும்பகோணம்

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி ஆண்கள் கலைக்கல்லூரியில் ஆசிரியர் தினத்தை யொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். தேர்வு நெறியாளர் ராமசுப்பிரமணியன், கணிதத்துறை தலைவர் குணசேகரன், கணிதத்துறை இணைப்பேராசிரியர் ரமேஷ், இயற்பியல் துறைத்தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகநிர்வாகவியல் துறை தலைவர் மோகன்ராஜ் செய்திருந்தார். நிகழ்ச்சியை துறைப்பேராசிரியர்கள் ரஜினிகாந்த், பிரபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story