மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

பரப்பாடியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் பரப்பாடி குளத்தின் பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் யேசுதுரை, நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், பஞ்சாயத்து துணைத்தலைவர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story