சப்த கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு


சப்த கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே சப்த கன்னியம்மன் கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே திருமங்கலம் ஊராட்சி செண்பகச்சேரி கிராமத்தில் சப்த கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கோபூஜை, யாகசாலை பூஜைகள் நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கலசத்தை வந்தடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு விழா நடந்தது. இதே போல செல்வ விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு விழா நடந்தது. இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story