சப்தகன்னியம்மன் கோவில் குடமுழுக்கு


சப்தகன்னியம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:47 PM GMT)

திருமருகல் அருகே சப்தகன்னியம்மன் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் சப்தகன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 20-ந் தேதி அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, லெட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக சாலை பூஜையும் காலை 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடும் நடைபெற்று. பின்னர் காலை 10 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story