மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி


மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி
x

மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

கீழே விழுந்தார்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்தவர் செல்வாம்பாள் (வயது 41). இவரது கணவர் செல்லமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வாம்பாள் தொண்டப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மாவிலிங்கையில் இருந்து புறப்பட்டு பஸ்சில் வேப்பந்தட்டைக்கு வந்துள்ளார்.

பின்னர் 'லிப்ட்' கேட்டு தொண்டப்பாடியை சேர்ந்த சகுந்தலா என்பவரது மொபட்டில் வேப்பந்தட்டையில் இருந்து தொண்டப்பாடிக்கு சென்றுள்ளார். பாலையூர் அருகே சென்றபோது ெமாபட்டின் சக்கரத்தில் சேலை சிக்கியதில் செல்வாம்பாள், ெமாபட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

சாவு

இதில் படுகாயம் அடைந்த செல்வாம்பாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வாம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story