கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா வரும் 2-ந்தேதி பயணம்


கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா வரும் 2-ந்தேதி பயணம்
x

சென்னை,

சசிகலா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றவும், தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காக்கவும், சசிகலா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தனது புரட்சிப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார். எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார்.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதியன்று மதியம் 2 மணிக்கு தியாகராயநகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு பாலம், மாதவரம் ரவுண்டானா, செங்குன்றம், பாடியநல்லூர் வழியாக கன்னிகைப்பேர் சென்றடைந்து, அங்கிருந்து தனது பயணத்தை சசிகலா பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கட்சியினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

சசிகலா மேற்கொள்ளும் இந்த பயணத்தில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள், ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிக்கும் தாய்மார்கள், இளைய தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி திரளாக கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story