சாத்தான்குளம் பகுதியில்மின்தடை தள்ளிவைப்பு


சாத்தான்குளம் பகுதியில்மின்தடை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் மின்தடை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர்

விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்செந்துர் கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம், உடன்குடி ஆகிய உபமின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் தவிர்க்க இயலாத காரணத்தினால் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று திட்டமிட்டு இருந்த மின்தடை 24-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதியில் இன்று வழக்கம்போல் மின்வினியோகம் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story