சாத்தான்குளம்அரசு மகளிர் கல்லூரியில் கட்டுரை போட்டி


சாத்தான்குளம்அரசு மகளிர் கல்லூரியில்   கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம்அரசு மகளிர் கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பாக, முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில், கணிதவியல் துறை முதலாமாண்டு மாணவி இந்துமதி முதல் பரிசையும், வணிக நிர்வாகவியல் துறை முதலாமாண்டு மாணவி கவிதா 2-வது பரிசையும், கணிதவியல் முதுநிலை 2-ம் ஆண்டு மாணவி அன்னாள் எலிசபெத் 3-வது பரிைசயும் பெற்றார். கட்டுரைப் போட்டிகளுக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் சின்னதாய் வழிகாட்டுதலில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் அமுதவாணி, வணிகவியல் துறைப் பேராசிரியர் வரலெட்சுமி மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் ஆகியோர் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.


Next Story