சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில்மாணவியர் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை சந்தை
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை சந்தை நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இணைந்து பொருட்களை சந்தைப்படுத்தும் விற்பனைச் சந்தையை கல்லூரி வளாகத்தில் நடத்தின. கல்லூரி முதல்வர் கு.சக்தி ஸ்ரீ விற்பனையை தொடங்கி வைத்தார். மகளிர் சுயஉதவிக் குழுவினரோடு இணைந்து கல்லூரி மாணவிகளும் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்தனர். இதில் ஆசிரியர்களும், மாணவிகளும் உற்சாகத்தோடு பங்கேற்று பொருட்களை சந்தைப்படுத்தினர். இந்த பொருட்களை சக மாணவியரும், ஆசிரியைகளும் போட்டி போட்டு வாங்கினர். மாணவியர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதோடு அவர்களின் சந்தைப்படுத்தல் திறனையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த சந்தை ஏற்பாடு செய்ததாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர்களான வணிக நிர்வாகவியல் துறைப்பேராசிரியை சி.அமுதவாணி, வணிகவியல் துறைத் தலைவர் வே. வரலக்ஷ்மி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட மேலாளர் ரூபன் ஆஸ்டின் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.