சாத்தான்குளம் அரசு நூலகத்தில் கோடை கால கொண்டாட்டம் நிறைவு
சாத்தான்குளம் அரசு நூலகத்தில் கோடை கால கொண்டாட்டம் நிறைவு பெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ராம கோபால கிருஷ்ண பிள்ளை அரசு முழு நேர கிளை நூலகத்தில் மாணவ-மாணவிகள் பங்கு பெற்ற கோடை கால கொண்டாட்ட நிறைவு விழா மாவட்ட நூலக அலுவலர் ரெங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. பொத்தகலன்விளை நூலகர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் சாமுவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நல் நூலகர் சந்திரசேகர் கலந்து கொண்டார். கோடை கொண்டாட்ட நிகழ்வாக டி.எம்.சவுந்திரராஜன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது தத்துவ பாடல்களை மாணவ- மாணவிகள் பாடினார்கள். உலக சிரிப்பு தினத்தை முன்னிட்டு கீர்த்திகா மற்றும் ஜெரோலின் மரியா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் இல்லம் தேடி கல்வி மையத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி, நூலக பணியாளர் மைக்கேல் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரை லிங்கம் நன்றி கூறினார்.