சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி தொடக்கம்


சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு காமராஜர் நகரில் குடிநீர் இணைப்பு வழங்கும் பொருட்டு கூடுதலாக 1,500 மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி நடைபெற்றது. இப்பணியை பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலருமான ஜோசப் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேவனேசம், சுந்தர், பேரூராட்சி பணியாளர்கள் முத்துக்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story