சாத்தான்குளம் கோவில் தண்ணீர் தொட்டியில் தத்தளித்த நல்லபாம்பு மீட்பு


சாத்தான்குளம் கோவில்   தண்ணீர் தொட்டியில் தத்தளித்த நல்லபாம்பு மீட்பு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் கோவில் தண்ணீர் தொட்டியில் தத்தளித்த நல்லபாம்பு மீட்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சித்திபுத்தி செல்வவிநாயகர் கோவிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று 7அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த கோவில் நிர்வாகிகள் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நல்ல பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.


Next Story