சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் தூய்மைப் பணி


சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில்   தூய்மைப் பணி
x

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் தூய்மைப் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் வளாகத் தூய்மைப் பணி நடைபெற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த இந்த பெருந்திரள் வளாகத் தூய்மைப் பணியில் கல்லூரி மாணவிகளுடன் புதுக்குளம் ஊராட்சி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களும் இணைந்து கல்லூரி வளாகத்தைத் தூய்மைப் படுத்தினர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சின்னத்தாய் முன்னிலையில் கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர் ரமேஷ் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் உமாபாரதி, வளர்மதி ஆகியோருடன் இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story