சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து சலுகைகளையும் வழங்கக்கோரி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தட்டேந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி ஒன்றிய தலைவர் கணபதி தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் துரை நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் சந்திரா, துணைத்தலைவர் வேம்பு, இணை செயலாளர் சுசீலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கைகள்

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். மற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வழங்குவது போல் மருத்துவ படி வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியதாரர்களுக்கு ஈமை கிரியை தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், குணசேகரன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story