தமிழ் புத்தாண்டையொட்டி சத்தி மார்க்கெட்டில்மல்லிகைப்பூ கிலோ ரூ.1,242-க்கு ஏலம்
தமிழ் புத்தாண்டையொட்டி சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,242-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்
தமிழ் புத்தாண்டையொட்டி சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,242-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்றும் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிேலா) ஒன்று ரூ.1,242-க்கும், முல்லை ரூ.740-க்கும், காக்கடா ரூ.625-க்கும், செண்டுமல்லி ரூ.27-க்கும், பட்டு பூ ரூ.105-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது.
மகிழ்ச்சி
நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ஒன்று ரூ.1,032-க்கு ஏலம் போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று 210 ரூபாய் விலை உயர்ந்து மல்லிகைப்பூ ரூ.1,242-க்கு ஏலம்போனது.
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க செயலாளர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் பூஜை அறைகளில் பூக்களை வைத்து வழிபடுவார்கள். மேலும் கோவிலுக்கும் பூக்களை கொண்டு செல்வார்கள். இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்' என்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.