சத்யசாய் சேவா சமிதி ஆண்டு விழா
தென்காசி அருகே சத்யசாய் சேவா சமிதி ஆண்டு விழா நடந்தது.
தென்காசியை அடுத்த மேலகரம் பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. காலை 5 மணிக்கு ஓம்காரம் சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது. தொடர்ந்து மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் பிரசாந்தி கொடி ஏற்றப்பட்டது. அனந்த நாராயணன் ருத்ரம் படித்தார். பின்னர் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்புலெட்சுமி வரவேற்றார். நெல்லை மகாதேவன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ஆன்மீக உரையாற்றினார். பாலவிகாஷ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் மங்கள ஆரத்தியும், அதனை தொடர்ந்து நாராயண சேவையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இந்த பல்லக்கு உற்சவம் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேலகரம் அக்ரஹாரம், ஸ்டேட் பேங்க் காலனி, விவேகானந்தா 3-வது தெரு வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. விழாவில் தென்காசி சமிதி கன்வீனர் பத்மநாபன், முன்னாள் பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்கர சதாசிவம், சுந்தரவேல், மல்லிகா, சீனிவாசன், கிருஷ்ணன், கோபால், ஜெயம் பாலு மற்றும் இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.