சத்தியமங்கலம் சூறாவளிக்காற்றுடன் மழைஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து சேதம்
சத்தியமங்கலம் சூறாவளிக்காற்றுடன் மழைஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து சேதம் ஆனது
சத்தியமங்கலம் அருகே சிவியார்பாளையத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. மாலை 3.30 மணி வரை சுமார் ½ மணி நேரம் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சிவியார்பாளையத்தில் விநாயகர் கோவில் அருகே உள்ள சத்தியமூர்த்தி என்பவரது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் நேந்திரம் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் சூறாவளிக்காற்றில் அவரது தோாட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.இதுதவிர சதுமுகை, ஆலத்துக்கோம்பை, ஒட்டர்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சூறாவளிக்காற்றில் சாய்ந்து சேதம் அடைந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தாசில்தாரிடம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் எங்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத் தர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.