சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு ஏலம் போனது

ஈரோடு

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.280-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.28-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.555-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும் ஏலம் போனது.


Next Story