சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.455-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்  மல்லிகைப்பூ கிலோ ரூ.455-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.455-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.455-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.23-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.410-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.130-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.


Related Tags :
Next Story