சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்   கனகாம்பரம் கிலோ ரூ.650-க்கு ஏலம்
x
தினத்தந்தி 25 Sept 2022 1:00 AM IST (Updated: 25 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கனகாம்பரம்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி வழக்கம்போல் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.612-க்கும், முல்லை ரூ.320-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.10-க்கும், பட்டுப்பூ ரூ.65-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.650-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும் ஏலம் போனது.


Next Story