சத்தியமங்கலத்தில் பேக்கரியை சேதப்படுத்திய 3 பேர் கைது
சத்தியமங்கலத்தில் பேக்கரியை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் பெரியார் பிறந்தநாளன்று ஒட்டப்பட்ட பெரியார் சுவரொட்டி மீது காவி சாயம் பூசப்பட்டது. மேலும் கடந்த 21-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தின் போது கோட்டுவீராம்பாளையத்தில் திறந்திருந்த பேக்கரி மீது கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் கூத்தனூர் ரோட்டில் வசித்து வரும் பா.ஜ.க. சத்தி நகர பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் (வயது 23), மீனவர் வீதியை சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் யோகேஷ் (27), சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி சத்தி நகர தலைவர் அச்சுதன் (30) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story