சத்தியமங்கலத்தில் தாிசு நிலத்தில் தீ விபத்து
சத்தியமங்கலத்தில் தாிசு நிலத்தில் தீப்பிடித்து எாிந்தது.
ஈரோடு
சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் அருகே உள்ள அழகிரி காலனியில் சுப்பிரமணி மற்றும் மயில்சாமி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் எந்த பயிரும் செய்யாமல் தரிசி நிலமாக முட்களும், செடி-கொடிகளும் வளர்ந்து கிடந்தது. இந்த நிலையில் திடீரென அந்த நிலம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தீ மளமளவென பரவி எரிந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதனால் அருகே உள்ள கரும்பு, வாழை தோட்டங்களில் தீ பிடிப்பது தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் தரிசி நிலத்தில் இருந்த முட்கள், செடி-கொடிகள் என 2 ஏக்கர் எரிந்து நாசம் ஆனது.
Related Tags :
Next Story