சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா
சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
புதுக்கோட்டை
திருமயம்:
திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள் சார்பில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இரவு தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று மண்டபடித்தால் சார்பில் விழா நடை பெற்றது. முன்னதாக சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சத்தியமூர்த்தி பெருமாள் கருடாழ்வார் வாகனத்தில் வைத்து வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story