அன்னப்பட்சி வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா


அன்னப்பட்சி வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா
x

அன்னப்பட்சி வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம்:

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி விசாக திருவிழா காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story