ஆஞ்சநேயர் கோவில்களில் சனிக்கிழமை வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சனிக்கிழமை வழிபாடு
x

நீடாமங்கலம் பகுதி ஆஞ்சநேயர் கோவில்களில் சனிக்கிழமை வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதை முன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. மேலும் ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story