சத்தியில் அதிக ஒலி எழுப்பிய 30 பஸ்களின் ஏர்ஹாரன்கள் அகற்றம்


சத்தியில் அதிக ஒலி எழுப்பிய 30 பஸ்களின் ஏர்ஹாரன்கள் அகற்றம்
x

சத்தியில் அதிக ஒலி எழுப்பிய 30 பஸ்களின் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன

ஈரோடு

சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவை, மைசூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் சார்பில் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.முருகேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பஸ்களில் பொருத்தப்பட்டு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு பஸ்கள் உள்பட 30 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அகற்றினர். மேலும் இதுபோன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பொருத்தக்கூடாது எனவும் பஸ்களின் டிரைவர்களுக்கு போலீசார் வலியுறுத்தினர்.


Next Story