பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்கக்குழு கூட்டம்
திருவாரூரில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்கக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் செயலாக்கக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பை கொண்டாடவும், அவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் மேம்படுத்தவும், பெண் குழந்தைகளை பற்றிய சமூகத்தின் மனநிலையை மாற்ற சிறப்பு இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் துறைவாரியாக நடத்திட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் மருத்துவத்துறை, கல்வித்துறை, போலீஸ் துறை, வேலைவாய்ப்புதுறை சார்பாக கூடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என்று செயலாக்கக்குழு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.