தூத்துக்குடியில் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடியில் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய 134-ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துக்கு மறைமாவட்ட முதன்மை குரு பென்சன் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பங்குதந்தைகள், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா வருகிற 3-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை மறையுறை, நற்கருணை ஆராதனை நடக்கிறது. வருகிற 1-ந் தேதி இரவு நற்கருணை பவனியும், 2-ந் தேதி காலை புது நன்மை திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனையும், 3-ந் தேதி திருவிழா ஆடம்பர திருப்பலியும், அதனைத் தொடர்ந்து மாதா மற்றும் சவேரியாரின் சப்பரப்பவனியும் நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்குதந்தை குழந்தை ராஜன், ஊர் நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.