தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு சிறப்பு மேளா


தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு சிறப்பு மேளா
x

தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு சிறப்பு மேளா நடைபெறுகிறது என்று முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு சிறப்பு மேளா நடைபெறுகிறது என்று முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

வட்டி விகிதம் உயர்வு

தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மத்திய நிதி அமைச்சகம் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதத்தை மாற்றம் செய்கிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில் 4-ம் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் கிசான்விகாஸ் பத்திரத்தின் வட்டி 7.2 ஆகவும், தேசிய சேமிப்பு பத்திரத்தின் வட்டி 7 சதவீதம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 7.6-ல் இருந்து 8 சதவீதம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டிலேயே அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டம் இது. தபால்நிலையங்களில் குறித்த கால வைப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பொது வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றை இணையதளம் மூலமும் தொடங்கலாம். மற்ற வங்கி கணக்குடன் பண பரிவர்த்தனை வசதிகளும் செயல்பாட்டில் உள்ளன. செல்வமகள் சேமிப்பு, பொது வைப்பு நிதி மற்றும் சேமிப்பு வங்கி கணக்குகளில் ஐ.எப்.எஸ்.சி. மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்

சிறப்பு மேளா

தபால் சேமிப்பு வங்கி கணக்குதாரர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார், பான் எண்களை அவர்களது கணக்குகளுடன் இணைக்க வேண்டும். மொபைல் எண்ணை இணைப்பதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பரிவர்த்தனைகளை குறுஞ்செய்தி மற்றும் ஈ-பாஸ்புக் வாயிலாக அறியலாம். பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையம், இணையதளம், செயலி ஆகியவற்றின் மூலம் திட்டங்கள் பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.தற்போது தஞ்சை கோட்டத்தில் உள்ளஅனைத்து தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்குகளுக்கான சிறப்பு மேளா வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தாண்டில் தபால் நிலையங்களில் புதிய சேமிப்பு கணக்கை தொடங்கி உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களின் பயன்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story