செல்வமகள் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு பத்திரம்


செல்வமகள் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு பத்திரம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் செல்வமகள் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு பத்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் தபால் துறையின் சார்பில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கிற்கான பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர், பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கிற்கான பத்திரங்களை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும். இது அக்குழந்தைகளின் உயர்கல்விக்கும், திருமணத்திற்கும் பயன்பெறும். இதில் ரூ.250 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தி அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கி மாதந்தோறும் பணம் செலுத்தலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் சேமிப்பு கணக்கில் செலுத்தும் தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி அவரவர் கணக்கில் செலுத்தப்படும். இத்தொகையை குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உயர் கல்விக்கு அல்லது திருமணத்திற்கு எடுக்கும் வகையில் இத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் தபால்துறை கண்காணிப்பாளர் தீத்தாரப்பன், உதவி கண்காணிப்பாளர் விஜய கோமதி, தலைமை அலுவலர் காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story