திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்
திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பலாத்காரம்
கோவில்பட்டியை அடுத்துள்ளடுத்த இளையரசனேந்தலில் உள்ள தீப்பெட்டி ஆலையில் ஜெபராஜ் மகன் வினோத் குமார் (வயது 23) தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர், அதே ஆலையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். மேலும், திருமணம் செய்வதாகக் கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வினோத்குமாரிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.
போக்சோ வழக்கு
அவரை திருமணம் செய்யாமல் தட்டிக்கழித்து வந்த வினோத்குமார் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் சிறுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.