திருக்குறள் கூறிக் கொண்டேசிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை


திருக்குறள் கூறிக் கொண்டேசிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறள் கூறிக் கொண்டே சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு சார்பில் சிலம்பத்தில் உலக சாதனை மற்றும் ஆசான்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் தூத்துக்குடியில் 270 மாணவர்களும், இலங்கையில் 80 மாணவர்களும் கலந்து கொண்டு திருக்குறள் கூறிக் கொண்டே சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர்.

சாதனை படைத்த மாணவவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் டி.பி.எஸ்.பொன்குமரன், பள்ளி முதல்வர் சகிலா ஆனந்த், குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு இயக்குனர் பர்னிதா லிங்கம் ஆகியோர் சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கும், ஆசான்களுக்கும் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

இதனை தொடர்ந்து வருகிற 19-ந் தேதி மதுரை, சுவிட்சர்லாந்து, மும்பையிலும், பிப்ரவரி 26-ந் தேதி யுனைடெட் கிங்டம், பெல்ஜியம், மலேசியா, இத்தாலி, சிங்கப்பூர், துபாய், இந்தியாவில் சென்னையிலும் சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மொத்தமாக 1330 மாணவர்களும் 133 சிலம்ப ஆசான்களும் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்த உள்ளனர் என்று அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story