எஸ்.பி.சி. கடல் மீன்கள், உணவகம் திறப்பு விழா


எஸ்.பி.சி. கடல் மீன்கள், உணவகம் திறப்பு விழா
x

எஸ்.பி.சி. கடல் மீன்கள், உணவகம் திறப்பு விழா நடந்தது.

வேலூர்

எஸ்.பி.சி. கடல் மீன்கள் மற்றும் உணவகம் சென்னை, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இங்கு உயர்தரமான கடல் மீன்களும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் மீன்களும் நியாயமான விலையில் தரமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடல் மீன்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பலவகையான சுவையான உணவுகளும் விற்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மற்றொரு கிளை வேலூர் மாவட்டம் குடியாத்தம் உம்மிடி ராமாஞ்ஜுலு தெருவில் தொடங்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.பி.சி. கடல் மீன்கள் மற்றும் உணவகத்தை குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். எஸ்.பிரியா சவுந்தரராசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் கே.விஜயன், கேரளா சீ புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முனாஸ், தொழில் அதிபர்கள் டி.நத்தம் அமர், பெ.கோடீஸ்வரன், ஓ.வி.எச்.யுவராஜ், இ.ரகுராமன் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திறப்பு விழாவுக்கு வந்தவர்களை எஸ்.பி.சி. கடல் மீன்கள் மற்றும் உணவகத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.சரவணன், இயக்குனர்கள் எஸ்.செந்தில்குமார், சிமுரளி, ஜே.உதயராஜ் ஆகியோர் வரவேற்றனர்.


Next Story