தராசு முத்திரை பதிக்கும் முகாம்


தராசு முத்திரை பதிக்கும் முகாம்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:30 AM IST (Updated: 18 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தராசு முத்திரை பதிக்கும் முகாம்

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் தராசு முத்திரை பதிக்கும் முகாம் நேற்று நடந்தது. இதற்கு நிலக்கோட்டை முத்திரை ஆய்வாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் முருகேசன், செயலாளர் பாலசாயிகுமார், பொருளாளர் நிஜாம் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதையடுத்து வியாபாரிகள் கொண்டு வந்த தராசுகளில் முத்திரை பதிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த முகாம் வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது. வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, எம். வாடிப்பட்டி, விருவீடு ஆகிய பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தராசு முத்திரை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




Next Story