போலி டாக்டருக்கு வலைவீச்சு
போலி டாக்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் (வயது 60) என்பவர் அப்பகுதி மக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் அவர் டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தலைமையிலான குழுவினர் அமலன் சேவுகராஜீன் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அங்கு அவர் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் மருத்துவத்திற்கு படிக்காமல் போலியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் தளவாய்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலி மருத்துவரான அமலன் சேவுகராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலி டாக்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.