கள்ளச்சாராய சாவு எதிரொலி: குமரியில் போலீசார் அதிரடி சோதனை


கள்ளச்சாராய சாவு எதிரொலி: குமரியில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராய சாவு எதிரொலியால் குமரியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கள்ளச்சாராய சாவு எதிரொலியால் குமரியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா? என்று ஆய்வு நடந்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகர்கோவில் மற்றும் தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கள்ளச்சாராய சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் மலையோர பகுதிகளில் கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனவே அந்த பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை யாரும் பிடிபடவில்லை. குமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story