கண்களை ஸ்கேன் செய்து ரேஷன்பொருள் தர நடவடிக்கை - அமைச்சர் சக்ரபாணி சட்டப்பேரவையில் தகவல்
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னை,
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பரிசோதனை முயற்சியாக நகர்புறம், கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் புதிய முறை அமல்படுத்தப்படும்.
நியாய வலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story