5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க திட்டம்


5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க திட்டம்
x

தமிழகத்தில் இந்த ஆண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

வேலூர்

தமிழகத்தில் இந்த ஆண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திட்ட தொடக்க விழா

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி சாரா கல்வி இயக்கம், வயது வந்தோருக்கான கல்வி திட்டம், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். டி. எம்.கதிர்ஆனந்த் எம்.பி., முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலைவர் பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொணடனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;

வேலூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 820 பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

5 லட்சம் பேருக்கு திட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ரூ.9.83 கோடி செலவில் தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க திட்டமிடப்பட்டு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு மக்களிடமும் நல்ல ஆதரவு உள்ளது.

குறிப்பாக அரக்கோணத்தில் நடைபெற்ற வயது வந்தோருக்கான கல்வி திட்ட எழுத்து தேர்வில் 2 ஆயிரத்து 747 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் இருந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்திற்கு மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. இந்த திட்டத்தை பல்வேறு பணிகள் இருந்தாலும் தலைமை ஆசிரியர்களாகிய நீங்கள் தான் சமுதாய, சமூக நோக்கத்துடன் இதனை கொண்டு சேர்க்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

விழாவில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் குப்புசாமி, துணை இயக்குனர் சசிகலா உள்பட கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story