என்.சி.சி.மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
என்.சி.சி.மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி என்.சி.சி. 9-வது பட்டாலியனுக்குட்பட்ட 4மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த என்.சி.சி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அழகப்பா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வீதம் காரைக்குடி 9-வது என்.சி.சி தமிழ்நாடு பட்டாலியன் அலுவலகத்தில் லெப்டினல் கர்னல் மிஷ்ரா வழங்கினார். நிகழ்ச்சியில் சுபேதார் மேஜர் சங்கர், தேசிய மாணவர் படை அதிகாரி கவிப்பிரியா மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story