சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு


சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்தமதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளிப்படிப்பு (1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை), பள்ளி மேற்படிப்பு (11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி) படிக்கும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு காலஅவகாசம் வருகிற 31-ந் தேதி வரை மத்திய அரசால் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று பேகம் அஸ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் வருகிற 31-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதி உள்ள சிறுபான்மை மாணவ-மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story