மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-வது வார்டு எம்.டி.ஆர். நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து கல்வி உதவித்தொகை வழங்கினார். அதனைத்தொடர்ந்து புளியம்பட்டி திருநகரம் பகுதியில் சிந்தனை மாளிகை, தமிழன் பகுத்தறிவு மன்றம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி பேக், இலவச நோட்டு, புத்தகங்களை அமைச்சர் வழங்கினார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவபிரகாசம், நகர் மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, நகர்மன்ற உறுப்பினர் கோகுல், வார்டு செயலாளர் டேனியல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story