பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x

பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படுவதால் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்

மடத்துக்குளம்

பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படுவதால் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்து அரசுப் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்த கல்வியாண்டிற்காக ஒருபுறம் மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்போடு உள்ளனர். புது சீருடை, நோட்டு, புத்ததகங்கள், புதிய நண்பர்கள், ஆசிரியர்கள், என்ற எதிர்பார்ப்பும், வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் உணர்வும் மாணவ, மாணவியர் மத்தியில் உள்ளது.

இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விடுமுறை நாட்களில் பள்ளி வளாகங்களில் செடிகள் முளைத்து புதர்கள் வளர்ந்துள்ளன. சில விளையாட்டு மைதானங்களில் காகிதக் குப்பைகள் பரவிக்கிடக்கிறது இதை சரி செய்யும் பணி மடத்துக்குளத்திலுள்ள அரசுபள்ளிகளில் நடக்கிறது.

தயார் நிலையில்

இதில் ஒரு பகுதியாக மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தி துப்புரவு பணி செய்யப்பட்டது. பள்ளியின் முன் பகுதி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இருந்த செடிகள், புற்கள், தாவரங்கள் அகற்றப்பட்டன. மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.


Related Tags :
Next Story