ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மேளதாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மேளதாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
x

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மேள, தாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மேள, தாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.

பவானி

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளை ஆரத்தி எடுத்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரிய-ஆசிரியைகள் உற்சாகமாக வரவேற்றார்கள். இந்தநிலையில் பவானி பூக்கடை வீதியில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வந்த மாணவ-மாணவிகளுக்கு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து மாணவ-மாணவிகளை வகுப்பறைக்கு அழைத்துச்சென்றார். அப்போது பள்ளிக்குழுத் தலைவர் நடராஜன், செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். பள்ளியின் முகப்பு பகுதியும் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

சத்தியமங்கலம்

இதேபோல் சத்தியமங்கலத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து ஆசிரிய-ஆசிரியைகள் வரவேற்றார்கள். இதேபோல் புதிதாக 1-ம் வகுப்பு சேர்ந்த குழந்தைகளை தலைமை ஆசிரியை மங்கையற்கரசி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முகக்கவசம் அணியாமல் வந்த குழந்தைகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மேளதாளங்கள் முழங்க மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோபியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

இதையொட்டி காலை 8 மணி முதலே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கூடம் வந்தனர். நுழைவு வாயிலிலேயே மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story