காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; முதன்மை கல்வி அதிகாரி தகவல்


காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; முதன்மை கல்வி அதிகாரி தகவல்
x

காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு

காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கொரோனா தாக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கூடங்கள் முழுமையாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மாணவ -மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டாம். பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிகளிக்கூடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனுப்ப வேண்டாம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக காலையில் பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவ -மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் மாணவ- மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை. ஈரோடு மாவட்டத்தில் வகுப்பறைகளில் மாணவ- மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. எனினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story