தொடக்க பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு சேமியா கிச்சடி, கேசரி


தொடக்க பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு சேமியா கிச்சடி, கேசரி
x

தொடக்க பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு சேமியா கிச்சடி, கேசரி நேற்று வழங்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு

தொடக்க பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு சேமியா கிச்சடி, கேசரி நேற்று வழங்கப்பட்டது.

காலை சிற்றுண்டி

அரசு தொடக்க பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்காக ரூ.33 கோடியே 56 லட்சம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தொடங்கி வைக்க உள்ளார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

கேசரி, சேமியா கிச்சடி

இந்தநிலையில், இந்த திட்டத்தை முன்கூட்டியே பரிச்சார்ந்த முறையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடக்க பள்ளிக்கூட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஈரோடு வட்டத்தில் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்க பள்ளிக்கூடங்களில் நேற்று காலை 2 ஆயிரத்து 445 மாணவ -மாணவிகளுக்கு கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒட்டு மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு மாநகர பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளிக்கூடத்தில், கணேசமூர்த்தி எம்.பி, மேயர் நாகரத்தினம் ஆகியோர் மாணவ -மாணவிகளுக்கு உணவு பரிமாறினர். மாணவ -மாணவிகளுடன் மேயர் நாகரத்தினம் மற்றும் பெற்றோர்கள் உணவை சாப்பிட்டு பார்த்தனர். இதில் முதன்மை பொறியாளர் மருதம், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர் பாஸ்கர், தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story