இடிந்துவிழும் நிலையில் பள்ளிக்கட்டிடம்


இடிந்துவிழும் நிலையில் பள்ளிக்கட்டிடம்
x

இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சரிசெய்து தரக்கோரி திருவாடானை அருகே உள்ள தினையத்தூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்


இடிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சரிசெய்து தரக்கோரி திருவாடானை அருகே உள்ள தினையத்தூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தினையத்தூர் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 150 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

சில பகுதிகளில் இடிந்துவிழாமல் இருக்க கயிறு கட்டியும், கட்டைகள் வைத்தும் சமாளித்து உள்ளோம். தற்போது மழைக்காலம் என்பதால் அந்த ஆபத்தான கட்டிடத்தில் கல்வி படிக்க குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எங்களின் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஆபத்தான கட்டிடமாக அந்த பள்ளிக்கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தை சரி செய்து கொடுக்குமாறு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இனியும் தாமதிக் காமல் அந்த பள்ளிக்கட்டிடத்தை மராமத்து செய்யா விட்டால் பல மாணவர்களின் உயிர் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஆய்வு

பலியான பின்னர் சரிசெய்து எந்த பலனும் இல்லை. இனியும் தாமதிக்காமல் உடனடியாக அந்த பள்ளிக்கட்டிடத்தை சரிசெய்து மாணவர்கள் அச்சமின்றி கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட பள்ளிக் கட்டிடத்திற்கு பதிலாக மாற்று இடம் ஏற்பாடு செய்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story